கவிதை வகைகள்
பிரபலமான தலைப்பு
என்னை பற்றி

எனது பெயர் Svr.பாமினி நான் ஈழத்தின் தென்மராட்சி சாவகச்சேரியை பிறப்பிடமாகவும் எனது பாடசாலைக் காலங்களில் நுணாவில் அமிர்தாம்பிகை வித்தியாலயத்திலும், சாவகச்சேரி மகளீர் கல்லூரியிலும் பயின்று புலம்பெயர்ந்து சுவிஸ்லாந்தில் வசித்து வருகின்றேன் . தற்ப்போது தென் இந்திய திரைப்பட பாடலாசிரியராகவும் அறிமுகமாகி இருக்கின்றேன். Read More >>

என்னைப்பற்றி

எனது பெயர் Svr.பாமினி நான் ஈழத்தின் தென்மராட்சி சாவகச்சேரியை பிறப்பிடமாகவும் எனது பாடசாலைக் காலங்களில் நுணாவில் அமிர்தாம்பிகை வித்தியாலயத்திலும், சாவகச்சேரி மகளீர் கல்லூரியிலும் பயின்று புலம்பெயர்ந்து சுவிஸ்லாந்தில் வசித்து வருகின்றேன் . தற்ப்போது தென் இந்திய திரைப்பட பாடலாசிரியராகவும் அறிமுகமாகி இருக்கின்றேன்

தொழில்

   » அறிவிப்பாளர்
   » பாடலாசிரியர்
   » கணனி வரைகலை வடிவமைப்பாளர்

எனது படைப்புக்கள்

01 கல்லறைப்பூக்கள் -2009

(லண்டன் தமிழ் இளையோர் அமைப்பால் 2009ம் ஆண்டு மாவீரர் நாளுக்கு வெளியிடப்பட்ட இந்த இசைப்பேழையில் என் இரு பாடல்கள் இடம்பெற்றுள்ளது.

02 விடியலைக்காண – 2010

(மருதநிலாக் கலையகம் 2010 ஆண்டு மாவீரர் நாள் அன்று வெளியிட்ட விடியலைக்காண இசைப்பேழையில் இரு பாடல்கள் இடம்பெற்றுள்ளது.)

03 தியாகத்தின் மூச்சு – 2011

(சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்பு 2011ம் ஆண்டு மாவீரர் நாள் ஐரோப்பா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் வெளியிட்ட தியாகத்தின் மூச்சு இசைப்பேழையில் முழுமையாக என் பாடல்கள் மட்டும் அடங்;கியதாக எட்டுப் பாடல்கள் வெளிவந்துள்ளன.)

04 வெல்வோம் வெல்வோம் - 2011

(தமிழீழ வெளியீட்டுப் பிரிவு 2011ம் ஆண்டு மாவீரர் நாள் அன்று வெளியிட்ட வெல்வோம் வெல்வோம் இசைப்பேழையில் ஐந்து பாடல்கள் வெளிவந்துள்ளன.)

05 நீயில்லையென்றாலே -2012

(ரமி தயாரிப்பில் 2012 காதலர் தினம் அன்று என் பாடல்கள் அடங்கிய முழுமையான இசைப்பேழையாக நீயில்லையென்றாலே வெளிவந்துள்ளது.)

06 கலையும் நீயே காதலும் நீயே குறும்படம் 2012

(இதில் கலையும் நீயே காதலும் நீயே என்ற என் பாடல் இடம்பெற்றுள்ளது.)

07 என் காதல் நீ இசைப் பேழை 2012

Safe1st Records ஆதரவில் தென் இந்திய இசையமைப்பாளர் ரவிப்பிரியன் இசையில் திப்பு, ஹரிச்சரண், சிறினீவாஸ் , சுவேதா மோகன் ,சத்யன், ஹரிணி ,மது பாலகிருஸ்னன், உசாராஜ், முகேஸ் ஆகியோர் குரலிலும் என் பாடல் வரிகளில் 12 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

விருதுகள்

   » மருதநிலாக் கலையகத்தால் கவிக்குயில் விருது 2010
   » MN MUSIC வழங்கிய ஈழக்குயில் விருது 2011
   »இலங்கை கலைஞர்கள் சங்கத்தால் 2012ம் ஆண்டு நாடத்திய 2011ம் ஆண்டில் சிறந்த பாடல் ஆசிரியர் தெரிவில் முதல் இடம்..

நன்றி
கவிக்குயில்
SVR.பாமினி